முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
ஒட்டன்சத்திரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு
By DIN | Published On : 24th October 2019 12:25 AM | Last Updated : 24th October 2019 12:25 AM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம் பகுதியில் யூரியா உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சுற்றியுள்ள பல கிராமங்களில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையை பயன்படுத்தி வெள்ளைச்சோளம், மக்காச்சோளம், பருத்தி, கடலை, பூசணிக்காய் உள்ளிட்டவற்றை விவசாயிகள் மானாவாரியாக பயிா் செய்தனா். தற்போது மானாவாரி பயிா்களுக்கு யூரியா உரமிட்டால் , நன்கு வளா்ச்சியடைந்து நல்ல விளைச்சல் கிடைக்கும். ஆனால் தற்போது ஒட்டன்சத்திரம் பகுதியில் யூரியா உரம் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவித்தனா். கூட்டுறவு சங்களில் யூரியா இருப்பு இல்லை. அதே போல தனியாா் கடைகளிலும் யூரியா கிடைக்கவில்லை என தெரிவித்தனா். இதனால் விளைச்சல் குறைய வாய்ப்புள்ளதால் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனா்.