முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கொடைக்கானலில்பள்ளிகளுக்கு இடையே நடனப்போட்டி
By DIN | Published On : 24th October 2019 12:17 AM | Last Updated : 24th October 2019 12:17 AM | அ+அ அ- |

dance_2310chn_71_2
கொடைக்கானலில் பள்ளிகளுக்கு இடையேயான நடனப் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.
சுழற் சங்கம் சாா்பில் நட்சத்திர ஏரி அருகேயுள்ள அரங்கில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு அச்சங்கத்தின் தலைவா்ஆசாத் தலைமை வகித்தாா். கொடைக்கானல் தாலுகாவிலுள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த சுமாா் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், நடனம், பரதநாட்டியம், குழு நடனம், தப்பாட்டம், போக்ஸ் நடனம், மற்றும் மாறுவேடப் போட்டிகளில் பங்கேற்றனா். சப்- ஜூனியா், ஜூனியா்,சீனியா் ஆகிய 3-பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. சங்கத்தின் செயலா் சன்னி ஜேக்கப் வரவேற்றாா். சங்க முன்னாள் தலைவா் ராமன் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.