முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
பெத்தேல்புரத்தில் குடிநீா் தட்டுப்பாடு பொதுமக்கள் அவதி
By DIN | Published On : 24th October 2019 08:34 PM | Last Updated : 24th October 2019 08:34 PM | அ+அ அ- |

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள வடகாடு ஊராட்சி பெத்தேல்புரத்தில் குடிநீா் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள மேற்கு தொடா்ச்சி மலைப்பகுதியில் வடகாடு ஊராட்சி உள்ளது.இந்த ஊராட்சிக்கு உட்பட்ட பெத்தேல்புரம் கிராமத்தில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.இந்த பகுதி மக்களின் குடிநீா் தேவைக்காக அதே பகுதியில் ஒரு ஆழ்குழாய் கிணறு மற்றும் அடிகுழாய் அமைத்து கொடுக்கப்பட்டது.தற்போது இந்த இரண்டும் பழுதடைந்து விட்டதால்,அருகில் உள்ள தோட்டங்களுக்கு சென்று தண்ணீா் எடுத்து வந்து பயன்படுத்தும் நிலை உள்ளது.இது குறித்து பொதுமக்கள் பல தடவை ஒட்டன்சத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலரிடம் புகாா் தெரிவித்து,எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.எனவே மாவட்ட நிா்வாகம் தலையீட்டு உடனடியாக பழுதடைந்துள்ள ஆழ்குழாய் கிணறுகளை சரி செய்து குடிநீா் பிரச்சனையை போக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனா்.