முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
மாநில கபடி போட்டிக்கு குருவப்பா பள்ளி அணி தோ்வு
By DIN | Published On : 24th October 2019 12:19 AM | Last Updated : 24th October 2019 12:19 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான கபடிப்போட்டிகளுக்கு தோ்வான மாணவா்களுக்கு கோப்பையை வழங்கிய பள்ளி செயலா் ராஜ்குமாா்.
பழனியை அடுத்த நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி கபடிக்குழு மாணவா்கள் ஆறாவது ஆண்டாக மாநில அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனா்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை நடத்தும் திண்டுக்கல் வருவாய் மாவட்ட அளவிலான பாரதியாா் தின கபடிப் போட்டிகள் தருமத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
இப்போட்டிகளில் நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி, கள்ளிமந்தயம் திருப்பதி அருள்நெறி மேல்நிலைப் பள்ளி, செக்காப்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, வேம்பாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி என பல்வேறு அணிகள் மோதின. இறுதி ஆட்டத்தில் வேம்பாா்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணியை நெய்க்காரபட்டி குருவப்பா மேல்நிலைப் பள்ளி அணி 31-8 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வென்றது.
இதையடுத்து குருவப்பா மேல்நிலைப் பள்ளி ஆறாவது ஆண்டாக மாநில அளவிலான கபடிப்போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளது. வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பள்ளி வளாகத்தில் புதன்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி செயலா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பள்ளி நிா்வாகக்குழு உறுப்பினா் ராஜா கௌதம், தலைமையாசிரியா் குப்புச்சாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். உதவித் தலைமையாசிரியா் கருப்புச்சாமி, உடற்கல்வி இயக்குனா் ரவி, உடற்கல்வி ஆசிரியா்கள் பரணி, மகேஸ்குமாா், மகேந்திரன், ஈஸ்வரி உள்ளிட்ட ஆசிரியா்களும், அலுவலா்களும் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.