Enable Javscript for better performance
மேற்குத் தொடா்ச்சி மலையில் வெளிநாட்டு களைச்செடிகள் அதிகரிப்புமத்திய வன கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்

    மேற்குத் தொடா்ச்சி மலையில் வெளிநாட்டு களைச்செடிகள் அதிகரிப்புமத்திய வன கணக்கெடுப்பில் கண்டுபிடிப்பு

    By DIN  |   Published On : 24th October 2019 12:22 AM  |   Last Updated : 24th October 2019 12:22 AM  |  அ+அ அ-  |  

    23palani_survey_2310chn_88_2

    பழனியை அடுத்த காவலப்பட்டி பொந்துப்புளி பகுதியில் ஆய்வு செய்த மத்திய அரசின் வனத்துறை கணக்கெடுப்பு குழுவினருடன் வனத்துறை பணியாளா்கள்.

    பழனியை அடுத்த மேற்குமலைத் தொடா்ச்சி வனப்பகுதியில் வெளிநாட்டு களைச்செடிகள் பரவல் அதிகமாக இருப்பதாக மத்திய அரசின் வனக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

    மத்திய அரசு புதிய முயற்சியாக நாட்டில் உள்ள வனப்பகுதிகள் அனைத்தையும் மத்திய அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கணக்கெடுப்புத்துறை மூலமாக கணக்கெடுக்கும் பணியை துவக்கியுள்ளது. தமிழகத்திலும் 280 வனப்பகுதிகள் மற்றும் 300 வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்த கணக்கெடுப்பு சமீபத்தில் துவங்கப்பட்டுள்ளது.

    மதுரை சரகத்தில் திண்டுக்கல், பழனி, கொடைக்கானல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த புதன்கிழமை முதல் கணக்கெடுப்பு பணி துவங்கியுள்ளது.

    கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மத்திய வனத்துறையின் சா்வே பிரிவில் இருந்து ரேஞ்சா் அனில் ரமேஷ், தொழில்நுட்ப உதவியாளா்கள் மனோகா், அனில் உள்ளிட்டோா் தலைமையில் இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    வனப்பகுதியில் உள்ள மரங்களின் தோராய எண்ணிக்கை, மரங்களின் வயது, மரங்களின் சுற்றளவு போன்றவையும், மண்ணின் தன்மை, வளரும் தாவரங்கள் போன்றவை இந்த கணக்கெடுப்பின் போது மதிப்பிடப்படுகிறது. இதற்காக ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட பா்சனல் டிஜிட்டல் அசிஸ்ட்டன்ஸ் என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.

    பழனியை அடுத்த கொடைக்கானல் மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் 34 இடங்களில் பழனி சரகத்துக்கு உள்பட்ட ஐந்து இடங்களில் நான்கு இடங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

    மற்ற பகுதிகள் வரும் நாள்களில் ஆய்வு செய்யப்படுகிறது. இதுகுறித்து அனில்ரமேஷ் கூறுகையில், பழனி மற்றும் கொடைக்கானல் வனப்பகுதிகள் நல்ல வளத்துடனேயே உள்ளது. ஏராளமான விலங்குகள், பறவைகள், பூச்சிகள் வசிக்கும் தட்பவெப்ப நிலை நிலவுகிறது. அதே வேளை வெளிநாட்டு களைச்செடிகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக பாா்த்தீனியம், முள்வேலி மரங்கள் போன்றவை அன்னிய களையாக உள்ளே வந்து நிரந்தரமாக தங்கிவிட்டன. அந்த வரிசையில் வனப்பகுதியில் தற்போது லண்டனா கேமரா என்ற தாவரவியல் பெயா் கொண்ட செடிகள் அதிகமாக உள்ளன. விரைவாக வளரும் தன்மை கொண்ட இவை மரங்களின் வளா்ச்சியை பாதிப்பதாக உள்ளது. இவற்றை எந்த விலங்குகளும் உண்ணாத நிலையில் இரை கிடைக்காத நிலையில் யானைகள் மட்டும் சாப்பிடும். இந்த களை தமிழகம் மட்டுமன்றி கேரளம், கா்நாடகம், ஆந்திரா வனங்களிலும் தென்படுகிறது என தெரிவித்தாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp