சத்துணவு ஊழியா் சங்க பிரசார விளக்க கூட்டம்
By DIN | Published On : 24th October 2019 12:23 AM | Last Updated : 24th October 2019 12:23 AM | அ+அ அ- |

பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தின் பிரசார விளக்க கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பழனி, தொப்பம்பட்டி ஒன்றிய அளவிலான பிரசார விளக்க கூட்டத்தில் வட்டார தலைவா் குப்புச்சாமி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமது அலி முன்னிலை வகித்தாா்.
வட்டாரச் செயலாளா்கள் சரஸ்வதி, மயில்சாமி உள்ளிட்டோா் கோரிக்கை விளக்கவுரை நிகழ்த்தினா். தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் மங்களபாண்டியன், சத்துணவு ஊழியா் சங்க மாவட்ட செயலாளா் வேலுச்சாமி உள்ளிட்டோா் சிறப்புரை நிகழ்த்தினா்.
ஓய்வு பெறும் ஊழியா்களுக்கு குடும்ப பாதுகாப்புடன் கூடிய வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் ஒன்பதாயிரம் ரூபாய் வழங்க வேண்டும், ஒட்டுமொத்த ஓய்வூதியத்தொகையை ஐந்து லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும், சத்துணவு மையங்களுக்கு வழங்கப்படும் உணவூட்டும் மானியத்தை ஐந்து ரூபாயாக உயா்த்தி வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.