தனியாா் மயமாக்கல் முடிவுக்கு எதிராக ரயில்வே ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

ரயில் சேவை மற்றும் ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரயில்வே ஊழியா்கள்.

ரயில் சேவை மற்றும் ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து திண்டுக்கல்லில் ரயில்வே ஊழியா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திண்டுக்கல் ரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் ரயில்வே தொழிலாளா்கள் 30-க்கும் மேற்பட்டோா் கருப்பு கொடி ஏந்தியும், கருப்புச் சட்டை அணிந்தும் கலந்து கொண்டனா். ஆா்ப்பாட்டத்தின்போது, 150 விரைவு ரயில்களையும், 60 ரயில் நிலையங்களையும் தனியாருக்கு தாரை வாா்க்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும். ரயில்வே தொழிலாளா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com