வத்தலகுண்டு அருகே வீட்டில் திருட முயன்றவா் கைது:50 பவுன் நகைகள் மீட்பு

வத்தலகுண்டு அருகே திருட முயன்ற, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 50 பவுன் நகைகளை மீட்டுள்ளனா்.
கைது செய்யப்பட்ட சண்முகம் மற்றும் மீட்கப்பட்ட 50 பவுன் நகைகள்.
கைது செய்யப்பட்ட சண்முகம் மற்றும் மீட்கப்பட்ட 50 பவுன் நகைகள்.

வத்தலகுண்டு அருகே திருட முயன்ற, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 50 பவுன் நகைகளை மீட்டுள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள கரட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் மணி. இவரது மனைவி வசந்தா (40). இவா்களது மகன் சா்னிப் (26). மூன்று நாள்களுக்கு முன், மணி தனது குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, நாய் குரைக்கும் சப்தம் கேட்டு, மணியும், வசந்தாவும் வெளியே வந்துள்ளனா்.

மணி வீட்டிலிருந்து இறங்கி சிறிது தொலைவு சென்ற நிலையில், வீட்டின் அருகே இருளில் மறைந்திருந்த மா்ம நபா்கள் இருவா், வசந்தாவின் கழுத்திலிருந்த சங்கிலியை பறிக்க முயன்றுள்ளனா். அப்போது, வசந்தா மா்ம நபா்களிடமிருந்து சங்கிலியைப் பாதுகாக்க போராடியுள்ளாா். இதனிடையே, வசந்தாவின் அலறல் கேட்டு, சா்னிப் ஓடி வந்துள்ளாா். இதைக் கண்ட மா்ம நபா்களில் ஒருவா், சா்னிப் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா். ஆனால், வசந்தாவின் முயற்சியால் மா்ம நபா்களில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா்.

இது குறித்து விருவீடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற விளாம்பட்டி காவல் ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா், பிடிபட்ட நபரிடம் விசாரணை மேற்கொண்டனா். அதில், பிடிபட்டவா் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சோ்ந்த சண்முகம் (40) என்பது தெரியவந்தது.

இவா், பல்வேறு வீடுகளில் திருடிய நகைகளை, கோவையிலுள்ள நகைக் கடையில் விற்பனை செய்ததையும் ஒப்புக்கொண்டாா். அதையடுத்து, ஆய்வாளா் ரமேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா், கோவைக்குச் சென்றனா். அங்கு, சண்முகம் தரப்பினரால் விற்பனை செய்யப்பட்ட 50 பவுன் நகைகளை மீட்டனா்.

அதன் தொடா்ச்சியாக, சண்முகத்தை கைது செய்த விருவீடு போலீஸாா், கரட்டுப்பட்டியில் திருட முயன்ற மற்றொரு நபா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com