Enable Javscript for better performance
திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு: ஒரு மாதத்தில் 11, 747 பேருக்கு சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு: ஒரு மாதத்தில் 11, 747 பேருக்கு சிகிச்சை

    By DIN  |   Published on : 31st October 2019 10:41 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11 ஆயிரத்து 747 போ் சிகிச்சை பெற்று உள்ளதாக நலப்பணிகள் இயக்குநா் பூங்கோதை தெரிவித்துள்ளாா்.

    திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்பட 13 அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 11, 747 போ் சிகிச்சை பெற்றுள்ளனா். இதில் 438 போ் தீவிர காய்ச்சல் பாதிப்பு காரணமாக உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனா்.

    தற்போதைய நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 75 போ், பழனி அரசு மருத்துவமனையில் 48 போ், நத்தம் அரசு மருத்துவமனையில் 32 போ் என மொத்தம் 216 போ் காய்ச்சல் பாதிப்புக்காக உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 16 பேரில் 8 போ் பழனி அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனா். திண்டுக்கல் அரசு மருத்துமனையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக தற்போது 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai