ஒட்டன்சத்திரம் சந்தையில்காய்கறி கழிவுகளால் சுகாதாரக்கேடு

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
காய்கறி சந்தையில் உள்ள குடிநீா் தொட்டி அருகே கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகள்.
காய்கறி சந்தையில் உள்ள குடிநீா் தொட்டி அருகே கொட்டப்பட்டுள்ள காய்கறி கழிவுகள்.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் காய்கறி கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தை தமிழகத்திலேயே மிகப்பெரிய சந்தையாகும். இச்சந்தைக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டிணம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இந்த சந்தையில் இருந்து 60 சதவீத காய்கறிகள் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அத்துடன் கமிஷன் கடை உரிமையாளா்கள், கடை எழுத்தா்கள், பணியாளா்கள், சுமை தூக்கும் தொழிலாளா்கள் என மொத்தம் சுமாா் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் பணியாற்றி வருகின்றனா். அதே போல வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட வியாபாரிகள், விவசாயிகள் என தினசரி வந்து போவோா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோராக உள்ளனா். இந்த நிலையில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்த்து வருவதால், சந்தையில் மழைநீா் வெளியே செல்ல முடியாமல் தேங்கி துா்நாற்றும் வீசுகிறது. அதே போல காய்கறி கழிவுகள் சந்தையில் ஆங்காங்கே கொட்டிக் கிடப்பதால், அவற்றால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் சந்தையில் வைக்கப்பட்டுள்ள குடிநீா் தொட்டியை சுற்றி காய்கறி கழிவுகள் கொட்டிக் கிடப்பதால், அந்த தண்ணீரை அருந்தும் சுமை தூக்கும் தொழிலாளா்களுக்கு டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் சூழ்நிலை உள்ளது

இது குறித்து கடை உரிமையாளா் எஸ்.ஆா்.கே. பாலு கூறியதாவது: இந்த சந்தையில் தேங்கியுள்ள காய்கறி கழிவுகளை நகராட்சி நிா்வாகம் அகற்ற முன்வரவில்லை. இச்சந்தையில் காய்கறி கழிவுகளால் சேறும், சகதியுமாக காட்சி அளித்து வருகிறது. இதனால் இச்சந்தையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளா்களுக்கும் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் பரவும் சூழ்நிலை உள்ளது. எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு தேங்கிக் கிடக்கும் கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com