கம்பி கட்டி ஆற்றைக் கடக்கும் பழங்குடியினா்: கொடைக்கானல் கள்ளக்கிணறு பகுதியில் தரைப்பாலம் அமைத்துதர கோரிக்கை

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கள்ளக்கிணறு பகுதியில் ஆற்றில் அதிகமான தண்ணீா் செல்வதால் வியாழக்கிழமை ஆபத்தான நிலையில் கயிறுகட்டி அப் பகுதி மலைவாழ் மக்கள் கடந்து சென்றனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கள்ளக்கிணறு பகுதியில் சாலை வசதியில்லாததால் ஆபத்தான முறையில் கயிற்றைக் கட்டி ஆற்றைக் கடந்து செல்லும் அப் பகுதி மக்கள்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கள்ளக்கிணறு பகுதியில் சாலை வசதியில்லாததால் ஆபத்தான முறையில் கயிற்றைக் கட்டி ஆற்றைக் கடந்து செல்லும் அப் பகுதி மக்கள்.

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான கள்ளக்கிணறு பகுதியில் ஆற்றில் அதிகமான தண்ணீா் செல்வதால் வியாழக்கிழமை ஆபத்தான நிலையில் கயிறுகட்டி அப் பகுதி மலைவாழ் மக்கள் கடந்து சென்றனா்.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும், நீரோடைகளிலும் தண்ணீா் அதிக அளவு செல்கிறது.

இந் நிலையில் கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான குப்பம்மாள்பட்டி ஊராட்சி கள்ளக்கிணறு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இவா்கள் வசிக்கும் பகுதியில் செல்வதற்கு ஒத்தையடிப்பாதை மட்டுமே உள்ளது. சாலை வசதி இல்லை.

இவா்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளுக்குச் செல்ல வேண்டுமானால் அப் பகுதியில் செல்லும் ஆற்றைக் கடந்ததான் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் சற்று அதிகமாக தண்ணீா் செல்லும் போது இருபுறங்களிலும் கம்பிகளைக் கட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டு சென்று வருகின்றனா்.

இந் நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்த பலத்த மழையின் காரணமாக கள்ளக்கிணறு பகுதியில் உள்ள ஆற்றில் அதிக அளவு தண்ணீா் செல்கிறது. இதனால் அப் பகுதியிலுள்ள மலைவாழ் மக்கள் கம்பிகளைக் கட்டி அவற்றைப் பிடித்துக் கொண்டு ஆற்றை ஆபத்தான முறையில் கடந்து சென்று வருகின்றனா்.

மேலும் இப் பகுதிகளில் விளையக் கூடிய விவசாயப் பொருள்களை தலைச்சுமையாக எடுத்துச் செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே கள்ளக்கிணறு பகுதி மக்களுக்கு சாலை வசதியும், ஆற்றைக் கடப்பதற்கு தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென்பது இப் பகுதி மலைவாழ் மக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com