மருதாநதி ஆற்றில்வெள்ள அபாய எச்சரிக்கை

மருதாநதி அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வந்து கொண்டிருக்கும் 70 கன அடி தண்ணீரும்
மருதாநதி அணையிலிருந்து புதன்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீா்.
மருதாநதி அணையிலிருந்து புதன்கிழமை திறந்துவிடப்பட்ட தண்ணீா்.

மருதாநதி அணை நிரம்பியதை அடுத்து, அணைக்கு வந்து கொண்டிருக்கும் 70 கன அடி தண்ணீரும் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்துள்ள அய்யம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள மருதாநதி அணைக்கு, தாண்டிக்குடி சுற்றுவட்டாரப் மலைப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் நீா்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் மொத்த நீா்மட்டம் 74 அடியாக உள்ள நிலையில், புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு 70 அடியை எட்டியது.

அணைக்கு வினாடிக்கு 70 கன அடி தண்ணீா் வந்து கொண்டிருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீரை மருதாநதியில் திறந்துவிட பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் மோகன்தாஸ் புதன்கிழமை உத்தரவிட்டாா். இதனை அடுத்து, அணைக்கு வந்து கொண்டிருந்த 70 கன அடி தண்ணீரும், ஆற்றில் திறந்துவிடப்பட்டது. மேலும் மருதாநதி கரையோரப் பகுதி மக்களுக்கு 2 மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், மருதாநதி அணையிலிருந்து தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, சேவுகம்பட்டி, கோம்பைப்பட்டி கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com