சுடச்சுட

  

  பன்றி வளர்ப்பதை  தட்டிக் கேட்டவரை தாக்கிய 4 பேர் கைது

  By DIN  |   Published on : 13th September 2019 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சோணைமுத்து (45), முருகன் (50), சரவணன் (24), மகேந்திரன் (25) ஆகிய 4 பேரும் அப்பகுதியில் பன்றிகள் வளர்த்து வருகின்றனர். 
      இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் (38) என்பவர், பன்றிகளால் நோய்கள் பரவி வருவதால், பன்றிகளை வளர்க்கக்கூடாது என்று கூறினராம். இதனால் ஆத்திரமடைந்த 4 பேரும் சேர்ந்து, புதன்கிழமை இரவு வீட்டில் இருந்த மகுடீஸ்வரனை தாக்கி காயப்படுத்தி உள்ளனர்.    இதில் பலத்த காயம் அடைந்த மகுடீஸ்வரன், மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து வியாழக்கிழமை அவர் அளித்த புகாரின்பேரில், ஒட்டன்சத்திரம் போலீஸார் 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai