சுடச்சுட

  

  மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை: விவசாயிகள்-வியாபாரிகள் கலந்தாய்வுக் கூட்டம்

  By DIN  |   Published on : 13th September 2019 08:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
        விளை பொருள்களை விற்பனை செய்வதில் இடைத்தரகர்கள் மூலம் விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்பினை தவிர்க்கும் வகையில், மின்னணு தேசிய வேளாண் விற்பனை சந்தை (இ-நாம்) திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 585 வேளாண் சந்தைக் குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளன. 
        2020 மார்ச் மாதத்துக்குள் மேலும் 415 சந்தைகளை இத்திட்டத்துடன் இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. 
        இத்திட்டம் குறித்து, திண்டுக்கல் பகுதியிலுள்ள விவசாயிகள் மற்றும் வணிகர்களுக்கான  கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, விற்பனைக் குழு செயலர் மு.வே. சந்திரசேகர் தலைமை வகித்தார். திண்டுக்கல் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் செ. ராமன் முன்னிலை வகித்து பேசியதாவது:
        இ-நாம் திட்டத்தின் கீழ், மாநில ஒற்றை உரிமம் பெறும் வியாபாரிகள், மாநிலம் முழுவதும் விற்பனைக்கு விளைபொருள்களை கொள்முதல் செய்ய முடியும். மேலும், பிற மாநிலங்களில் விளையக்கூடிய பொருள்களையும் தேசிய வேளாண் விற்பனை சந்தைகள் மூலமாக கொள்முதல் செய்யலாம். இதன் மூலம், வியாபாரிகள் மட்டுமின்றி விவசாயிகளும், இடைதரகர்களின் தலையீடு இல்லாமல் அதிக லாபம் பெற முடியும் என்றார். 
      கூட்டத்தில், விவசாய நல சங்கத் தலைவர் ராஜரத்தினம், திண்டுக்கல் நெல், அரிசி வணிக உரிமையாளர் சங்க செயலர் முருகேசன், நிலக்கடலை மற்றும் பருப்பு வியாபாரிகள் சங்கத் தலைவர் சண்முகவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai