தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.7.30 கோடிக்கு தீர்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் 11 அமர்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் சுமார் ரூ.7.30 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.  


திண்டுக்கல் மாவட்டத்தில் 11 அமர்வுகளில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் சுமார் ரூ.7.30 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.  
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களிலும் நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வுகளை பெற்றனர்.  வங்கி வராக்கடன்கள் 441, நீதி மன்றங்களில் நிலுவையில் இருந்த வழக்குகள் 1,695 என அனைத்துக்கும் தீர்வு எட்டப்பட்டது.  இதற்காக மாவட்டம் முழுமையிலும் 11 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.  இதில் சுமார் ரூ.7 கோடியே 30 இலட்சத்து 23 ஆயிரத்து 746  மதிப்பில் தீர்வுகள் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com