பழனி அருகே மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி பெண் பலி
By DIN | Published On : 19th September 2019 08:10 AM | Last Updated : 19th September 2019 08:10 AM | அ+அ அ- |

பழனி அருகே புதன்கிழமை மின் கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதியதில் பெண் உயிரிழந்தார்.
பழனியை அடுத்த நல்லூரைச் சேர்ந்தவர் ராமசாமி மனைவி மகாலட்சுமி (28). இவர் புதன்கிழமை தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் மானூர் - தாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதி கீழே விழுந்தார்.
இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த மகாலட்சுமி தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராமசாமி லேசான காயங்களுடன் உயிர்தப்பினார்.
சம்பவ இடத்துக்கு வந்த கீரனூர் போலீஸார் மகாலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.