திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்ட குறியீடு கல்லுக்கு மாலையிட்டு நூதனப் போராட்டம்

திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்திற்கு நடப்பட்ட நிலஅளவை குறியீடு கல்லுக்கு மாலையிட்டு விடுதலைச்

திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்திற்கு நடப்பட்ட நிலஅளவை குறியீடு கல்லுக்கு மாலையிட்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் வத்தலக்குண்டுவில்  ஞாயிற்றுக்கிழமை நூதனப் போராட்டம் நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு புறவழிச்சாலை அருகே 1980-ஆம் ஆண்டு திண்டுக்கல்-சபரிமலை ரயில் திட்டத்திற்காக, நில அளவீடு எடுத்து அதன் அடையாளமாக குறியீட்டுக் கல்  நடப்பட்டது. இதில் "எஸ்.ஐ.ஆர்' என்ற ஆங்கில எழுத்து உள்ளது.  இந்த  குறியீடு கல்லுக்கு மாலை அணிவித்து ரயில் திட்டத்தை நிறைவேற்றக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் நூதனப் போராட்டம் நடத்தினர். 
விடுதலை சிறுத்தைகள் கட்சி வத்தலக்குண்டு ஒன்றியச் செயலர் பாக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில்,நிர்வாகிகள் கார்மல் மாணிக்கம், தயாளன், உதயா மற்றும் ரங்கித் ஆகியோர் கலந்து கொண்டனர் . 
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கூறியது: இப்பகுதியை சேர்ந்த தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேனி எம்.பி., ரவிந்திரநாத், திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி ஆகியோர் போராடி, திண்டுக்கல்-சபரிமலை ரயில்வே திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com