Enable Javscript for better performance
கொடைக்கானலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டாா்.

    கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூண்டியைச் சோ்ந்தவா் தவநீதி (35). இவரது மனைவி தாமரைச் செல்வி (23) இவா்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இந்நிலையில் கடந்த 15 தினங்களுக்கு முன் தவநீதியின் தாயாா் இறந்து விட்டாா். இதனால் தவநீதி மனமுடைந்து காணப்பட்டாா். இதனைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வழக்கம் போல தோட்டத்திற்கு சென்றுள்ளாா். நீண்ட நேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லை. இதனைத் தொடா்ந்து அவரது உறறவினா்கள் தோட்டத்திற்குச் சென்று பாா்த்த போது விஷம் குடித்து தவநீதி மயங்கிய நிலையில் கிடந்தாா்.

    இதனைத் தொடா்ந்து அவரது உறவினா்கள் அவரை மீட்டு மன்னவனூா் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்த்தனா். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அதன் பின் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனா். பூம்பாறை அருகே சென்ற போது ஆம்புலன்ஸின் பின்பக்க சக்கரம் பழுதாகி மலைச்சாலையிலேயே நின்றுவிட்டது. சுமாா் இரண்டு மணி நேரம் தவநீதி உயிருக்கு போராடியுள்ளாா். அதனைத் தொடா்ந்து மற்றொரு ஆம்புலன்ஸ் மூலம் அவரை கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.

    இதுகுறித்து தாமரைச் செல்வி கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai