Enable Javscript for better performance
பழனியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: அபராதம் விதிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பழனியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: அபராதம் விதிப்பு

    By DIN  |   Published on : 25th September 2019 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பழனியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
                திண்டுக்கல் மாவட்டம், பழனியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருள்கள் தாராளமாக புழங்குகின்றன. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பழனி அடிவாரம், பேருந்து நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள கடைகளில் மறைத்து வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
          இது குறித்த புகாரின்பேரில், பழனி நகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடைகளை கண்காணித்து, செவ்வாய்க்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அடிவாரம், சன்னிதி வீதி, கிரி வீதி, காந்தி மார்க்கெட், பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கடைகளில் இருந்து பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் தட்டுகள், தடை செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் பைகள் என ஆயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருள்களை நகராட்சி அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். மேலும், இவற்றை விற்பனை செய்த  கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தம் ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai