Enable Javscript for better performance
வெள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் மனு- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் வியாபாரம் செய்ய அனுமதி கோரி சிறு வியாபாரிகள் மனு

    By DIN  |   Published on : 25th September 2019 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் தொடர்ந்து வியாபாரம் செய்வதற்கு அனுமதி அளிக்கக்கோரி சிறு வியாபாரிகள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     கொடைக்கானல் வெள்ளி நீர் வீழ்ச்சிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை நம்பி கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த ஏராளமான சிறுவியாபாரிகள் கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு, சாலையோர கடைகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி கொடைக்காலைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனர். 
    இதுதொடர்பாக கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி சிறு வியாபாரிகள் முன்னேற்ற நலச் சங்கத்தின் தலைவர் எம்.சுல்தான் கூறியதாவது: கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 70 சிறு வியாபாரிகள் வெள்ளி நீர்வீழ்ச்சிப் பகுதியில் கடை அமைத்துள்ளனர். கடந்த 40 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளை நம்பி, தங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டுள்ளனர். 
     இந்நிலையில், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள் கடைகளை அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் 25 ஆம் தேதி முதல் பெரும்பாலான கடைகளை அகற்றிவிட்டதால், தற்காலிகமாக தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்து வருகிறோம். இந்த கடைகளையும் அப்புறப்படுத்த அரசு அலுவலர்கள் தெடார்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
     இதனால் சுமார் 100 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும். விடுமுறை காலங்களிலும், சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் நாள்களிலும், எங்கள் கடைகளினால்  எவ்வித போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டதில்லை. இதனை கருத்தில் கொண்டு நாங்கள் தொடர்ந்து வியாபாரம் நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai