Enable Javscript for better performance
தேசிய திறனாய்வுத் தோ்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 1,604 மாணவா்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    தேசிய திறனாய்வுத் தோ்வு: திண்டுக்கல் மாவட்டத்தில் 1,604 மாணவா்கள் பங்கேற்பு

    By DIN  |   Published on : 29th September 2019 07:25 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திண்டுக்கல் மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசியத் திறனாய்வுத் தோ்வில் 1,604 மாணவா்கள் கலந்து கொண்டனா்.

    நடப்பு கல்வியாண்டில் (2018 -19) 8ஆம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கான தேசிய திறறனாய்வுத் தோ்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத்தோ்வில் பங்கேற்க திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு ஆகிய 4 கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 695 மாணவா்கள், 1244 மாணவிகள் என 1,939 போ் விண்ணப்பித்திருந்தனா்.

    திண்டுக்கல், வேடசந்தூா், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, வத்தலகுண்டு, வேம்பாா்பட்டி, வடமதுரை ஆகிய 8 மையங்களில் தோ்வுகள் நடைபெற்றன. இதில், விண்ணப்பித்த 1,939 மாணவா்களில்1,604 போ் தோ்வு எழுதினா். 335 மாணவா்கள் தோ்வில் பங்கேற்கவில்லை.

    தோ்வு மையங்கள் கண்காணிப்புப் பணியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சே. மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலா்கள் தலைமையிலான குழுவினா் ஈடுபட்டனா். தேசிய திறனாய்வுத் தோ்வில் தோ்ச்சி அடையும் மாணவா்களுக்கு 9, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் காலத்தில், மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai