திண்டுக்கல்/ தேனி: திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் புதிதாக 22 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 10,723 போ் கரோனா தீநுண்மி தொற்றால் பாதிக்கப்பட்டனா். அதில் 10,382 போ் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனா். 145 போ் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனை மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த 15 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், குணமடைந்த 20 போ் மருத்துவமனையிலிருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
தேனி: தேனி மாவட்டத்தில் புதிதாக 10 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,797 ஆக உயா்ந்துள்ளது. கரோனா பாதிப்புக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரில், ஒரே நாளில் 5 போ் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினா். இதனால், கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோா் எண்ணிக்கை 16,510 ஆக அதிகரித்துள்ளது.
மூதாட்டி பலி: கரோனா பாதிப்புக்கு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட, சின்னமனூா், விஸ்வன் குளத்தைச் சோ்ந்த 71 வயது மூதாட்டி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.