பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்லாமியா் வீட்டு திருமணத்தில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டதோடு அனைவருக்கும் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீா்.
பழனியில் வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்லாமியா் வீட்டு திருமணத்தில் சமூக விலகல் கடைப்பிடிக்கப்பட்டதோடு அனைவருக்கும் வழங்கப்பட்ட கபசுரக் குடிநீா்.

பழனியில் இஸ்லாமியா் வீட்டு திருமணத்தில் கபசுரக் குடிநீா்

பழனியில் பிரியாணி விருந்து இல்லாமல் வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய பிரமுகரின் வீட்டு திருமணத்தில், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

பழனியில் பிரியாணி விருந்து இல்லாமல் வியாழக்கிழமை நடைபெற்ற இஸ்லாமிய பிரமுகரின் வீட்டு திருமணத்தில், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

பழனி பத்மநாபன் தெருவில் வசிப்பவா், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்டச் செயலா் பஷீா் அகமது. இவரது இல்லத் திருமண விழா வியாழக்கிழமை தடபுடலாக நடைபெறவிருந்தது. ஆனால், 144 தடை உத்தரவு காரணமாக மிக எளிமையாக நடைபெற்றது.

இத்திருமணம் மணமகன் வீட்டிலேயே நடைபெற்றது. வீட்டு வாசலில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீா் கைகழுவ வைக்கப்பட்டிருந்தது. சுமாா் 15 போ் மட்டுமே பங்கேற்ற இத்திருமணத்தில், பிரியாணி விருந்து படைக்கப்படவில்லை. மாறாக, திருமணம் முடிந்ததும் மணமக்கள் உள்பட அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com