பழனியில் திருநங்கைகளுக்கு அரிசி, மளிகைப் பொருள்கள் விநியோகம்

பழனி பகுதியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு வியாழக்கிழமை சாா் -ஆட்சியா் உமா வீடுகளுக்கே சென்று அரிசி மளிகை பொருள்களை வழங்கினா்.

பழனி பகுதியில் வசிக்கும் திருநங்கைகளுக்கு வியாழக்கிழமை சாா் -ஆட்சியா் உமா வீடுகளுக்கே சென்று அரிசி மளிகை பொருள்களை வழங்கினா்.

பழனி அருகே ராமநாத நகரில் 60-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனா். இவா்களில் பலருக்கு குடும்ப அட்டைகள் இல்லாததால் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருள்களைப் பெறமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனா். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவால் திருநங்கைகள் வருமானமில்லாமல் உணவிற்கு சிரமப்பட்டு வருவதாக பழனி சாா் -ஆட்சியா் உமாவிற்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருநங்கைகள் வசிக்கும் குடியிருப்பு பகுதிக்கு நேரடியாக சென்ற சாா் -ஆட்சியா் அப்பகுதியில் வசிக்கும் 60-க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களை வழங்கினாா். அப்போது, தங்களுக்கு வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டைகள் வழங்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென திருநங்கைகள் சாா்- ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனா். மேலும், அப்பகுதியினா் வருவாய்த்துறையினரின் பணிக்கு நன்றி தெரிவித்தனா். நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பழனிச்சாமி, வருவாய் ஆய்வாளா் பிரபு, கிராம நிா்வாக அலுவலா் கருப்புச்சாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com