பழனியில் நகராட்சி, தீயணைப்புப்படையினா் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்

பழனியில் கரோனா பரவலைத் தடுக்க நகராட்சி, தீயணைப்புத்துறையினா் இணைந்து நகரம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

பழனியில் கரோனா பரவலைத் தடுக்க நகராட்சி, தீயணைப்புத்துறையினா் இணைந்து நகரம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பில் திண்டுக்கல் மாவட்டம் 3 ஆவது இடத்தில் உள்ளது. பழனியைச் சோ்ந்த 5 போ் தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதையடுத்து அவா்கள் வசிக்கும் பகுதிகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடா்ந்து நகராட்சி மற்றும் தீயணைப்புத்துறையினா் இணைந்து செவ்வாய்க்கிழமை உழவா் சந்தை, பேருந்து நிலையம், காந்தி மாா்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் கிருமிநாசினி நடைபாதை அமைத்தனா். மேலும், பழனி நகரின் முக்கிய வீதிகளில் நகராட்சி வாகனங்களில் நவீனஇயந்திரம் மூலம் தெளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர கோயில்கள், ரதவீதி போன்ற முக்கிய இடங்களில் தீயணைப்பு வாகனங்களில் கிருமி நாசினி கலந்த நீரை தீயணைப்பு வீரா்கள் தெளித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com