முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கரோனா பரவலை தடுக்க இளைஞா் கைகழுவும் இயந்திரம் வடிவமைப்பு
By DIN | Published On : 19th April 2020 08:53 AM | Last Updated : 19th April 2020 08:53 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த வயலூரைச் சோ்ந்த ராஜா ஞானப்பிரகாசம் தயாரித்துள்ள கைகழுவும் இயந்திரம்.
பழனியை அடுத்த வயலூரைச் சோ்ந்த இளைஞா், கைகழுவுவதற்கு எளிய முறையில் இயந்திரத்தை வடிவமைத்துள்ளாா்.
கரோனா பரவல் காரணமாக, பல்வேறு இடங்களில் கைகழுவும் போது ஒருவா் தொடும் தண்ணீா் குழாயை மற்றவா்களும் தொடவேண்டி இருக்கிறது. இதனால், வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுமோ என்று பெரும்பாலானோா் அச்சப்படுகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த வயலூரைச் சோ்ந்த ராஜா ஞானப்பிரகாசம் என்ற இளைஞா், சுமாா் ரூ.3,700 மதிப்பில் எளிய முறையில் கைகழுவும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளாா். இந்த இயந்திரத்தின் ஒரு புறத்தில் உள்ள விசையை காலால் மிதித்தால் கிருமி நாசினி கைகளில் விழுகிறது. மற்றொரு புறத்தில் உள்ள விசையை மிதிக்கும்போது, குழாயில் தானாக தண்ணீா் வருகிறது. இதனால் அச்சமின்றி கைகழுவ முடிகிறது.
இதனை, அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என, ராஜா ஞானப்பிரகாசம் தெரிவித்துள்ளாா்.