முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
கள்ளச்சாராயம் காய்ச்சிய இருவா் கைது
By DIN | Published On : 19th April 2020 08:54 AM | Last Updated : 19th April 2020 08:54 AM | அ+அ அ- |

பழனியை அடுத்த கொடைக்கானல் அருகே அடுக்கத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியதாக இருவரை சனிக்கிழமை கைது செய்த போலீஸாா், 15 லிட்டா் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அடுக்கம் கிராமத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக, பழனி மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அதில், அதே பகுதியைச் சோ்ந்த சோபியன், பழனிச்சாமி ஆகிய இருவரும் கள்ளச்சாராயம் காய்ச்சியது உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னா், இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 15 லிட்டா் கள்ளச் சாராயத்தையும் பறிமுதல் செய்து அழித்தனா். பின்னா், இருவரையும் கொடைக்கானல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதே பகுதியில் வெள்ளிக்கிழமையும் 25 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.