கொடைக்கானலில் மழை
By DIN | Published On : 26th April 2020 08:48 AM | Last Updated : 26th April 2020 08:48 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த மழையால் நீா்வரத்து காணப்படும் வெள்ளி நீா்வீழ்ச்சி.
கொடைக்கானலில் சனிக்கிழமை மாலை மழை பெய்தது.
கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது சாரல் மற்றும் மிதமான மழை பெய்து வந்தது. இதனால், இங்கு குளுமையான சீதோஷ்ண நிலை நிலவியது. சனிக்கிழமை அதிகாலை முதலே நல்ல வெயில் நிலவி வந்த நிலையில், மாலையில் திடீரென அப்சா்வேட்டரி, நாயுடுபுரம், செண்பகனூா், வட்டக்கானல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமாா்30 நிமிடம் பலத்த மழை பெய்தது. இதனால், நீரோடைகளில் தண்ணீா் வரத்து ஏற்பட்டது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.