கொடைக்கானலில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்த ஆட்சியர்

கொடைக்கானலில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். 
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி
மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி

கொடைக்கானலில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார். 

கொடைக்கானலில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அவற்றை கட்டுப்படுத்தும் பணியில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொடைக்கானல் பகுதிகளான பாக்கியபுரம், அண்ணாநகர், டர்னர்புரம், இந்திராநகர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகள் எவ்வாறு எடுக்கப்பட்டுள்ளதை ஆய்வு நடத்தினார். 

அதன்பின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

 தொடர்ந்து கொடைக்கானல் அருகே அட்டுவம்பட்டியிலுள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கரோனா தொற்று  பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். 

இந் நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார், வட்டாட்சியர் அரவிந்த், நகராட்சி ஆணையாளர் நாராயணன், மருத்துவ அதிகாரி அரவிந்த் உள்ளிட்ட அனைத்து அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com