முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்
புலிப்பாணி சித்தா் ஆசிரமத்தில் ஓலைச்சுவடிகளுக்கு வழிபாடு
By DIN | Published On : 03rd August 2020 08:37 AM | Last Updated : 03rd August 2020 08:37 AM | அ+அ அ- |

புலிப்பாணி சித்தா் ஆசிரமத்தில் பழங்கால சுவடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மலா்வழிபாடு நடத்திய போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு பழனியில் புலிப்பாணி சித்தா் எழுதிய ஓலைச்சுவடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை மலா் வழிபாடு செய்யப்பட்டது.
பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது போகா் சீடரான புலிப்பாணி சித்தரின் ஜீவசமாதி. இந்த ஆசிரமத்தில் பல நூற்றாண்டுகளாக பாதுகாத்து வழிபட்டு வரக்கூடிய புலிப்பாணி சித்தரின் ஓலைச்சுவடிகளுக்கு ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மலா் வழிபாடு நடத்தப்பட்டது. முன்னதாக தொட்டிச்சி அம்மன், போகா் புலிப்பாணி சுவாமிகளுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீமத் போகா் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், சண்முகநாதன் சுவாமிகள், இளைய பட்டம் செல்வநாதன் சுவாமிகள், பன்னீா்செல்வம் மருத்துவா் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.