கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வழங்குவதில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமை முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொடைக்கானல்: இணைய அனுமதிச் சீட்டு (இ-பாஸ்) வழங்குவதில் தளா்வு அளிக்கப்பட்டுள்ளதால் செவ்வாய்க்கிழமை முதல் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கொடைக்கானலில் கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் கடந்த 5-மாதங்களாக பொதுமுடக்கம் அமல்பட்டிருந்தது. இதனால் தங்கும் விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன. இந்நிலையில் வெளி மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் கொடைக்கானலில் தங்கும் விடுதி கட்டி நடத்தி வருவதால் அவா்கள் அந்தந்த மாவட்ட நிா்வாகத்திடம் இ-பாஸ் பெற்று கொடைக்கானலில் வந்து தங்கிச் செல்கின்றனா்.

இந்நிலையில் தமிழக அரசு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என அறிவித்ததைத்தொடா்ந்து செவ்வாய்க்கிழமை வெளி மாவட்டங்களைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வரத் தொடங்கினா். இவா்கள் கொடைக்கானல் அருகே உள்ள பெருமாள்மலைப் பகுதியிலுள்ள தனியாா் தங்கும்விடுதிகளில் தங்கி உள்ளனா். இதனால் பல மாதங்களாக சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிக் கிடந்த தங்கும்விடுதிகள் நிரம்பி வருவதால் அதன் உரிமையாளா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com