கொடைக்கானலில் கோழிக்குஞ்சு  உருவத்தில் உருளைகிழங்கு

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு பிரித்தெடுக்கும் பணியின் போது கிடைத்த கோழிக்குஞ்சு வடிவிலான உருளைக்கிழங்கை பொதுமக்கள் ஆர்வமாகப் பார்த்து சென்றனர்.
கொடைக்கானலில் கோழிக் குஞ்சு  உருவத்தில் உருளைகிழங்கு
கொடைக்கானலில் கோழிக் குஞ்சு  உருவத்தில் உருளைகிழங்கு

கொடைக்கானலில் உருளைக்கிழங்கு பிரித்தெடுக்கும் பணியின் போது கிடைத்த கோழிக்குஞ்சு வடிவிலான உருளைக்கிழங்கை பொதுமக்கள் ஆர்வமாகப் பார்த்து சென்றனர்.

கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதிகளான மன்னவனுர், பூம்பாறை, செண்பகனுர், வில்பட்டி, மாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் உருளைக்கிழங்கு சாகுபடி செய்யப்பட்டு  மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கடந்த மாதம் 40 கிலோ சிப்பம் ரூ 2000 முதல் ரூ.2200 வரை விலைக்கு விற்பனையானது. தற்போது 40 கிலோ சிப்பம் ரூ.1800 முதல் ரூ.1600 வரை விற்பனை செய்யப்படுகிறது.

தற்போது செண்பகனுர், பிரகாசபுரம் உள்ளிட்ட பகுதிகளில் விளைந்த உருளைக்கிழங்கு எடுக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியின் போது உருளைக்கிழங்கானது கோழிக் குஞ்சு போன்ற வடிவில் விளைந்திருந்தது. இந்த உருளைக் கிழங்கை பொது மக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com