கொடைக்கானல்: ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்ட நபர் சடலமாக மீட்பு

கொடைக்கானலில் பெய்த கனமழையின் காரணமாக ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட நபரை தீயணைப்பு வீரர்கள் இன்று சடலமாக மீட்டனர்.
மணி என்ற யோகராஜ்
மணி என்ற யோகராஜ்

கொடைக்கானலில் பெய்த கனமழையின் காரணமாக ஆற்று வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட நபரை தீயணைப்பு வீரர்கள் இன்று சடலமாக மீட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இந்நிலையில் சர்வேநம்பர் செல்லும் வழியில் உள்ள ஆற்று பாலம் தற்போது புதுபிக்கும் பணியானது நடந்து வருகிறது. இதனால் அப்பகுதிக்கு செல்ல தற்காலிகமாக நடைபாதை அமைத்துள்ளனர். இந்த ஆற்றில் தற்காலிக நடை பாதை அமைத்த இடத்தில் நேற்று இரவு பெய்த கனமழையில் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. 

அப்போது குறிஞ்சி நகரைச் சேர்ந்த மணி என்ற யோகராஜ் 55 என்பவர் நேற்று இரவு ஆற்றை கடக்க முயற்சி செய்துள்ளார். ஆற்றில் தண்ணீர் பெருக்கு அதிகமாகன காரணத்தால் அவரை ஆற்று நீர் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியினர் காவல் துறையினருக்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். 

இதனையடுத்து சந்தேகத்தின் அடிப்படையில் இன்று காலை ஆற்றுப் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் அடித்துச் செல்லபட்டவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். அப்போது ஆற்றின் கரையோரப்பகுதியில் அவர் சடலமாக மீட்கபட்டார். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com