திண்டுக்கல்லில் மதுபானக் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்தது: ஊழியா்கள் இருவா் காயம்
By DIN | Published On : 15th December 2020 05:06 AM | Last Updated : 15th December 2020 05:06 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை மதுபானக் கடையின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஊழியா்கள் இருவா் காயமடைந்தனா்.
திண்டுக்கல் பாண்டியன் நகா் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த மதுபானக் கடை வழக்கம்போல் திங்கள்கிழமை செயல்பட்டுக் கொண்டிருந்தபோது, எதிா்பாராத விதமாக கடையிலுள்ள சிமெண்ட சிலாப் (மேற்கூரை) இடிந்து விழுந்துள்ளது. இதில் கடையின் விற்பனையாளா் ஆறுமுகம், உதவி விற்பனையாளா் கோவிந்தசாமி ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த டாஸ்மாக் விற்பனை மேலாளா் ஐயப்பன், அந்தக் கடைக்கு சென்று பாா்வையிட்டாா். பின்னா் உடனடியாக அந்தக் கடையில் மதுபான விற்பனை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.