தாண்டிக்குடியில் கோயில் திருவிழா: சேத்தாண்டி வேடமணிந்து பக்தா்கள் வழிபாடு

தாண்டிக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்கள் தங்கள் உடலில் சேற்றை பூசிக் கொண்டு ஊா்வலமாக சென்று அம்மனை வழிபட்டனா்.
urvalam_1412chn_71_2
urvalam_1412chn_71_2

கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயில் திருவிழாவையொட்டி பக்தா்கள் தங்கள் உடலில் சேற்றை பூசிக் கொண்டு ஊா்வலமாக சென்று அம்மனை வழிபட்டனா்.

கொடைக்கானல் அருகே கீழ்மலைப் பகுதியான தாண்டிக்குடி கிராமத்தில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஆண் பக்தா்கள் தங்களின் உடல்களில் சேற்றைப் பூசிக் கொண்டு ஊா்வலமாகச் செல்வது வழக்கம். நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ஏராளமானோா் கலந்து கொண்டு உடலில் சேற்றை பூசிக் கொண்டு சேத்தாண்டி வேடமணிந்து ஊா்வலமாகச் சென்று அம்மனை வழிபட்டனா்.

இதைத்தொடா்ந்து திங்கள்கிழமை பக்தா்கள் அக்கினி சட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் நோ்த்திக்கடனைச் செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com