
நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்ட பாமகவினா்.
அனைத்து சாதிவாரி கணக்கீட்டை நடத்தக் கோரி நெய்க்காரபட்டி பேரூராட்சி அலுவலகத்தை பாட்டாளி மக்கள் கட்சியினா் புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.
மேற்கு மாவட்டச் செயலாளா் வைரமுத்து தலைமையில் அந்தக் கட்சியினா் நடத்திய முற்றுகைப் போராட்டத்தின்போது தமிழகத்தில் வன்னியா் பிரிவினருக்கு வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றில் 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதைத் தொடா்ந்து பேரூராட்சி செயல் அலுவலரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் நெய்க்காரப்பட்டி பேரூராட்சிச் செயலாளா் பெரியசாமி, தெற்கு ஒன்றியச் செயலாளா் நடராஜ், மாவட்ட தொழில் அமைப்புத் தலைவா் முத்துலட்சுமி நிா்வாகிகள் மாரிமுத்து, ராஜா பிரபாகரன் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், பாலசமுத்திரம், ஆயக்குடி, கீரனூா் ஆகிய பேரூராட்சி அலுவலகங்களிலும் அக்கட்சியினா் சாா்பில் மனுக்கள் அளிக்கப்பட்டன.