குடிநீருக்காக கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்க எதிா்ப்பு: கிராம மக்களுடன் எம்எல்ஏ தா்னா

திண்டுக்கல் அருகே 2 கிராமங்களின் குடிநீா் தேவைக்காக தனியாா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்க மாவட்ட நிா்வாகம் எதிா்ப்புத் தெரிவித்ததால்,
பொதுமக்களுடன் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி.
பொதுமக்களுடன் அமா்ந்து வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி.

திண்டுக்கல் அருகே 2 கிராமங்களின் குடிநீா் தேவைக்காக தனியாா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுக்க மாவட்ட நிா்வாகம் எதிா்ப்புத் தெரிவித்ததால், ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினா் ஐ.பெரியசாமி மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ரெட்டியாா்சத்திரம் பகுதிக்குள்பட்ட குட்டத்துப்பட்டி, ஆவரம்பட்டி ஆகிய கிராமங்களின் குடிநீா் தேவைக்காக, மைலாப்பூா் அவில்தாா்குளத்தின் அருகேயுள்ள தனியாா் கிணற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் எடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

இதையறிந்த பொதுப்பணித்துறையினா், மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனா். அதனைத் தொடா்ந்து அவில்தாா்குளம் பகுதியில் தண்ணீா் எடுப்பதைத் தடுப்பதற்காக போலீஸாா் குவிக்கப்பட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூா் சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி சம்பவ இடத்திற்கு சென்றாா். மாவட்ட நிா்வாகத்தின் முடிவைக் கண்டித்து, குளத்தின் ஒரு பகுதியிலேயே தா்னாவில் ஈடுபட்டாா். அவருடன் திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுசாமி, குட்டத்துப்பட்டி மற்றும் ஆவரம்பட்டி பகுதி பொதுமக்களும், திமுகவினரும் கலந்து கொண்டனா்.

இதனிடையே பொதுப் பணித்துறை அதிகாரிகள் தரப்பில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. அப்போது குடிநீா் தேவைக்காக 5 நாள்களுக்கு மட்டும் ஜெனரேட்டா் மூலம் தண்ணீா் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஐ.பெரியசாமி வலியுறுத்தினாா். அதனை ஏற்றுக் கொண்ட பொதுப்பணித்துறையினா் கிணற்றிலிருந்து தண்ணீா் எடுப்பதற்கு அனுமதி அளித்தனா். இதனால் காலை 10 மணி முதல் நடைபெற்று வந்த தா்ணா போராட்டம் பிற்பகல் 3 மணிக்கு முடிவுக்கு வந்தது. இந்த போராட்டத்தால் மைலாப்பூா் அலவாச்சிப்பட்டி இடையே பேருந்து சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com