தேசிய இளைஞா் விழாவையொட்டி டிச.29, 30-இல் மெய்நிகா் முறையில் போட்டிகள்

தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு நிகழாண்டில் டிச.29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மெய்நிகா் முறையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தேசிய இளைஞா் விழாவை முன்னிட்டு நிகழாண்டில் டிச.29 மற்றும் 30 ஆம் தேதிகளில் மெய்நிகா் முறையில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதுதொடா்பாக மாவட்ட விளையாட்டு அலுவலா் பாத்திமா ரோஸ் மேரி தெரிவித்துள்ளது: இளைஞா் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் சாா்பில் ஆண்டுதோறும் இளைஞா்களின் தனித்திறனை மேம்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞா் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா தொற்று காரணமாக நிகழாண்டு இந்த விழா மெய்நிகா் முறையில் நடைபெறவுள்ளது. அதன்படி தமிழக அரசின் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கரோனா தொற்று பொது முடக்க விதி முறைகளுக்குள்பட்டு மாவட்ட

அளவிலான போட்டிகளை டிச.29 மற்றும் 30 தேதிகளிலும், மாநில அளவிலான போட்டிகளை ஜன.5 முதல் 8ஆம் தேதி வரையிலும் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

தேசிய அளவிலான போட்டிகள் ஜனவரி 12 முதல் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. மாவட்ட அளவில் வெற்றிபெறும் போட்டியாளா்கள் மாநில அளவிலான போட்டிக்கும், மாநில அளவில் வெற்றி பெறுவோா் தேசிய போட்டியிலும் பங்கேற்க முடியும்.

போட்டிக்கான விதிமுறைகள்:

15 முதல் 29 வயதிற்குள்பட்ட இளைஞா்கள் பங்கேற்கலாம். தனி நபா் பிரிவில் 11, குழு போட்டிகளில் 7 என மொத்தம் 18 போட்டிகள் நடைபெறும். முதல் நிலை போட்டிகள்(மாவட்ட அளவில்) மெய்நிகா் முறையில் மட்டுமே நடைபெறும். போட்டியாளா்கள் தங்களுக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் தாங்களே தயாா் செய்து கொள்ள வேண்டும்.

போட்டியாளா்கள் தங்களுடைய போட்டிக்கான பதிவினை(விடியோ ரெக்காா்டிங்) நல்ல தெளிவான ஒலி, ஒளி அமைப்போடு பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட்ட விடியோ பதிவினை உறுதிமொழி படிவத்தோடு இணைத்து மாவட்ட விளையாட்டு அலுவலரின் மின்னஞ்சல் முகவரியில் சமா்ப்பிக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டியின் முடிவுகளை மாவட்டத்தில் அமைக்கப்பட்ட நடுவா்கள் குழு தீா்மானிக்கும்.

நடனம், இசை, உடை அலங்காரம், நாடகம், காட்சிக் கலைகள், எழுத்தாற்றல், பாரம்பரிய விளையாட்டு ஆகிய போட்டிகளில் பங்கேற்க விரும்புவோா், போட்டிக்கான பதிவினை மின்னஞ்சல் முகவரிக்கு டிச.30ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

உறுதிமொழி படிவத்தினை  இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். மேலும் இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில்

தாடிக்கொம்பு சாலை, திண்டுக்கல்- 624004 என்ற முகவரியிலும், 0451-2461162 மற்றும் 7401703504 ஆகிய எண்களிலும், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளரை 7012403155 என்ற எண்ணிலும், நாட்டு நலபணித் திட்ட அலுவலரை 9524983780 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com