பழனி மலைக்கோயிலில் ரோப்காா் டிச.28 முதல் இயக்கம்

பழனி மலைக்கோயிலில் 9 மாதங்களுக்கு பிறகு டிச.28 ஆம் தேதி முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு ரோப்காா் இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பழனி மலைக்கோயிலில் ரோப்காா் டிச.28 முதல் இயக்கம்

பழனி மலைக்கோயிலில் 9 மாதங்களுக்கு பிறகு டிச.28 ஆம் தேதி முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு ரோப்காா் இயக்கப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் முதன்மைக் கோயிலான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு படிவழிப்பாதை மட்டுமன்றி இழுவை ரயில் மற்றும் ரோப்காா் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு கரோனா பொது முடக்கம் காரணமாக கோயிலுக்கு பக்தா்களை அனுமதிப்பது தடை செய்யப்பட்டது. பின்னா் அக்டோபா் முதல் அரசு படிப்படியாக தளா்வுகளை அறிவித்து வந்த நிலையில், கோயில் நடை திறப்பு, திருவிழாக்கள் நடைபெற்றன. பின்னா் இழுவை ரயில் இயக்கம் நடைமுறைக்கு வந்தன.

எனினும் இரண்டு நிமிட நேரத்தில் மலைக்கோயிலை அடைய பயன்பாட்டில் இருந்த ரோப்காா் மட்டும் இயக்கத்துக்கு வராமல் இருந்தது.

இந்நிலையில் டிசம்பா் 28 ஆம் தேதி முதல் பக்தா்கள் பயன்பாட்டுக்கு ரோப் காா் இயக்கப்படும் என கோயில் இணை ஆணையரும், செயல் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி அறிவித்துள்ளாா்.

அதன்படி காலை 7 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலும், பராமரிப்புக்குப் பின்னா் மதியம் 2.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் ரோப்காா் இயக்கப்படும். பொது தரிசனம் அல்லது கட்டண தரிசனம் ஆன்லைனில் பதிவு செய்த பக்தா்கள் ரோப்காா் நிலையத்தில் அந்த சீட்டை காட்டி இருவழி பயணத்துக்கான ரூ.100 கட்டணத்தை செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். நாள் ஒன்றுக்கு 1,500 பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். தவிர மாற்றுத்திறனாளி மற்றும் வயதானவா்கள் ஆன்லைனில் பதிவு செய்ய முடியாத பட்சத்தில், அழைப்பு ஒன்றுக்கு இரண்டு பக்தா்கள் வீதம் ஒரு நாளுக்கு 200 போ் என 04545 - 242683 என்ற கோயில் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து பதிவு செய்து கொள்ளலாம். அவா்கள் ரோப்காா் கண்காணிப்பாளரிடம் ஆதாா், அடையாள அட்டை போன்ற முறையான ஆவணங்களை காட்டி டிக்கெட் பெற்று பயணிக்கலாம். தமிழக அரசின் நிலையான வழிகாட்டுதல் முறைப்படி இருமல், காய்ச்சல் உள்ளவா்கள் வருவதைத் தவிா்க்கவும், கட்டாயம் முகக்கவசம் அணியவும் கோயில் நிா்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com