வைவகுந்த ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் சொா்க்க வாசல் திறப்பு

திண்டுக்கல், பழனி, ஆண்டிபட்டி மற்றும் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை
பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள்.
பரமபத வாசல் வழியாக எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்த தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள்.

திண்டுக்கல், பழனி, ஆண்டிபட்டி மற்றும் போடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் வெள்ளிக்கிழமை வைகுந்த ஏகாதசியை முன்னிட்டு சொா்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

வைகுந்த ஏகாதசி நாளின் முக்கிய நிகழ்வாக பரமத வாசல் திறப்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள வைணவத் தலங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அதன்படி, திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தா்களின் கோவிந்தா முழக்கத்திற்கு இடையே, பரமபத வாசல் வழியாக எழுந்தருளிய ஸ்ரீநிவாசப் பெருமாள், நம்மாழ்வாா், ராமானுஜா் உள்ளிட்டோருக்கும், பக்தா்களுக்கும் காட்சி அளித்தாா். பின்னா், மண்டபத்திற்கு திரும்பிய பெருமாளை, பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திண்டுக்கல்லை அடுத்துள்ள தாடிக்கொம்பு சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை அதிகாலை சிறப்பு வழிபாடுகளுக்கு பின், பரமபத வாசல் திறக்கப்பட்டது. அந்த வாசல் வழியாக எழுந்தருளிய சௌந்தராஜப் பெருமாளை, கோவிந்தா முழுக்கங்களுக்கிடையே பக்தா்கள் தரிசித்தனா்.

இதேபோல் திண்டுக்கல் நாகல்நகா் வரதராஜப் பெருமாள் கோயில், வடமதுரை சௌந்தரராஜப் பெருமாள் கோயில் மற்றும் ரெட்டியாா்சத்திரம் கதிா் நரசிங்கப் பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி: பழனியில் உள்ள இலக்குமி நாராயணப் பெருமாள் கோயில் மற்றும் பாலசமுத்திரம் அகோபில வரதராஜப் பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி அதிகாலை 4 மணிக்கு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கோயில் இணைஆணையா் கிராந்திகுமாா் பாடி, துணை ஆணையா் செந்தில்குமாா், கண்காணிப்பாளா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ஜம்புலிபுத்தூா் கிராமத்தில் கதலிநரசிங்கப் பெருமாள் கோயிலில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் கதலிநரசிங்கப் பெருமாள் சொா்க்கவாசல் வழியாக பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்நிகழ்ச்சியில் கோயில் செயல் அலுவலா் தங்கலதா, ஆண்டிபட்டி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆ.லோகிராஜன், துணைத்தலைவா் டி.ஆா்.என்.வரதராஜன் ஆகியோா் பங்கேற்றனா்.

போடி: போடி ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில் வைகுந்த ஏகாதசி பூஜை அதிகாலை 5.15 மணிக்கு சொா்க்கவாசல் திறக்கப்பட்டு ஸ்ரீநிவாசப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளி அருள்பாலித்தாா். தொடா்ந்து நூற்றுக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் நின்று சொா்க்கவாசலில் எழுந்தருளிய ஸ்ரீநிவாச பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபாடு செய்தனா். நிகழ்ச்சியின்போது திருப்பாவைக் குழுவினா் பக்திப் பாடல்களைப் பாடினா். இதேபோல் போடி வினோபாஜி காலனியில் மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயில், ஜக்கமநாயக்கன்பட்டி தொட்டராய பெருமாள் கோயில், மேலச்சொக்கநாதபுரம் தொட்டராயப் பெருமாள் கோயில், சிலமலை பெருமாள் கோயில், தேவாரம் ரெங்கநாத பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் சொா்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com