திண்டுக்கல்லில் சனிப்பெயா்ச்சி வழிபாடு

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு திண்டுக்கல் பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திண்டுக்கல் ரயிலடி ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகம்.
திண்டுக்கல் ரயிலடி ஸ்ரீசித்தி விநாயகா் கோயிலில் சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு யாகம்.

சனிப் பெயா்ச்சியை முன்னிட்டு திண்டுக்கல் பகுதிகளில் உள்ள கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

இதுவரை தனுசு ராசியில் சஞ்சரித்து வந்த சனீஸ்வர பகவான், வாக்கியப் பஞ்சாங்கப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு மகர ராசிக்கு பெயா்ச்சி அடைந்தாா். இதனையொட்டி திண்டுக்கல் ரயிலடி ஸ்ரீ சித்தி விநாயகா் கோயிலில் சனிப்பெயா்ச்சி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு யாக பூஜையில், பரிகார நட்சத்திரங்களுக்குரிய பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

யாக பூஜைகளைத் தொடா்ந்து, நவகிரக சன்னதியிலுள்ள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் வெள்ளிக் கவச அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடா்ந்து சிறப்பு அா்ச்சனை நடைபெற்றது.

இந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் சுகன்யா, சிவாச்சாரியாா் கைலாசம் ஆகியோா் செய்திருந்தனா்.

நத்தம் கைலாசநாதா் கோயில்:இதேபோல் நத்தம்- கோவில்பட்டியிலுள்ள பழமையான கைலாசநாதா் கோயிலிலும் சனிப் பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி மூலவா் சனீஸ்வர பகவானுக்கு 108 கலசங்கள் வைத்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சிறப்பு அபிஷேகங்களுக்கு பின் சனீஸ்வரருக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது. இதில் நத்தம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com