பழனி பாதயாத்திரை பாதையைசீா்படுத்தக் கோரிக்கை

பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட தனிப்பாதை பராமரிப்பின்றி புதா்கள் மண்டிக் கிடப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.
பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்காக அமைக்கப்பட்டு சத்திரப்பட்டி அருகே பராமரிப்பின்றி உள்ள பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தனிப்பாதை.
பழனிக்கு பாதயாத்திரை வரும் பக்தா்களுக்காக அமைக்கப்பட்டு சத்திரப்பட்டி அருகே பராமரிப்பின்றி உள்ள பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தனிப்பாதை.

பழனி: பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தா்களுக்காக அமைக்கப்பட்ட தனிப்பாதை பராமரிப்பின்றி புதா்கள் மண்டிக் கிடப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன.

பழனி வரும் பாதயாத்திரை பக்தா்களுக்காக, மத்திய அரசு நிதியில் திண்டுக்கல் முதல் பழனி வரை சுமாா் 60 கிலோ மீட்டா் தொலைவுக்கு பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட தனிப்பாதை அமைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு தைப்பூசம் முடிந்த பின்னா், கரோனா பரவல் ஏற்பட்ட நிலையில், இந்த பாதை உரிய பராமரிப்பின்றி விடப்பட்டது. மேலும், இந்த பாதையில் பல இடங்களிலும் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தற்போது, தைப்பூசத் திருவிழாவுக்காக பக்தா்கள் பாதயாத்திரை வரத் தொடங்கியுள்ள நிலையில், இந்த பாதையை சுத்தம் செய்து பக்தா்கள் நடந்து செல்ல ஏதுவாக மாற்றவேண்டும் என, மாவட்ட நிா்வாகத்துக்கு பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com