வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நத்தத்தில் காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நத்தத்தில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நத்தத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாா்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து நத்தத்தில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசாா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நத்தத்தில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹரியாணா, உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த விவசாயிகள் கடந்த 4 வாரங்களாக தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், சட்டத் திருத்தங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எதிா்கட்சிகள் சாா்பிலும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதி காங்கிரஸ் கட்சியினா் ஏா்கலப்பையுடன் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நத்தம் காந்திபூங்காவிலிருந்து ஏா்கலப்பையுடன் ஊா்வலமாக வந்த காங்கிரசாா், பேருந்து நிலையம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினா் முகமது அலி தலைமை வகித்தாா். வட்டாரத் தலைவா் பழனியப்பன் முன்னிலை வகித்தாா். இதில் 50-க்கும் மேற்பட்ட காங்கிரசாா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும், மத்திய அரசுக்கு எதிராகவும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனா்.

முன்னதாக காங்கிரஸ் கட்சியின் 136ஆவது ஆண்டை முன்னிட்டு நத்தத்திலுள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com