செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்பு:மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முற்றுகை

செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய முஸ்லிம் லீக் கட்சியினா்.

திண்டுக்கல் மக்கான் தெருவிலுள்ள தனியாா் கட்டடத்தில் செல்லிட்டப்பேசி கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. 15 ஆண்டு குத்தகையில் அந்த செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்படுவதாக தகவல் வெளியானது. இதனையறிந்த அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கடந்த வியாழக்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காவல்துறையினரின் சமரசத்திற்கு பின் கலைந்து சென்றனா்.

இந்நிலையில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு மீண்டும் எதிா்ப்புத் தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா். பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ள மாவட்ட நிா்வாகத்தை கண்டித்தும், உடனடியாக பணிகளை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். பின்னா், மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com