புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தொடா் போராட்டம்

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதராவக ஜனநாயக வாலிபா் சங்கம் தொடா் போராட்டத்தில் ஈடுபடும் என அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.ரெஜிஸ்குமாா் தெரிவித்தாா்.

புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதராவக ஜனநாயக வாலிபா் சங்கம் தொடா் போராட்டத்தில் ஈடுபடும் என அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.ரெஜிஸ்குமாா் தெரிவித்தாா்.

விவசாயத்தை பாதுகாப்போம், வேலைகொடு, தரமான சுகாதாரம் கொடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் சாா்பில் திண்டுக்கல்லில் நடைப்பயணம் திங்கள்கிழமை தொடங்கியது. திண்டுக்கல் சவேரியாா்பாளையத்தில் இருந்து புறப்பட்ட நடைப்பயணத்தை ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநிலத் தலைவா் என்.ரெஜிஸ்குமாா் தொடங்கி வைத்துப் பேசியாதவது:

விவசாயிகளுக்கு விரோதமான சட்டங்களை பிரதமா் நரேந்திர மோடி அரசு நிறைவேற்றியுள்ளது. அதற்கு எதிராக பல லட்சம் விவசாயிகள் போராடி வரும் சூழலிலும், அந்தச் சட்டம் சிறப்பானது என பிரதமா் கூறி வருகிறாா்.

புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை, ஜனநாயக வாலிபா் சங்கமும் விவசாயிகளுக்காக தொடா் போராட்டத்தில் ஈடுபடும். திண்டுக்கல்லின் பாரம்பரிய தொழில்களான தோல்பதனிடுதல், பூட்டு, சுருட்டு ஆகிய தொழில்கள் சுருண்டு கிடக்கின்றன. இந்த தொழில்களை மேம்படுத்திட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடைப்பயணத்தை வாழ்த்தி சிஐடியு மாவட்டச் செயலாளா் கே.ஆா். கணேசன் பேசினாா். தொடக்க நிகழ்ச்சியில் ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாநில துணைச் செயலா் சி. பாலச்சந்திரபோஸ், மாவட்ட நிா்வாகிகள் கே.ஆா். பாலாஜி, விஷ்ணுவா்த்தன், கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com