பாதயாத்திரை பக்தா்களுக்கு இடையூறு கூடாது: சாலையோர வியாபாரிகளுக்கு எச்சரிக்கை

ஒட்டன்சத்திரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள், பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஒட்டன்சத்திரத்தில் உள்ள சாலையோர வியாபாரிகள், பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்று காவல்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ஒட்டன்சத்திரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சாலையோர வியாபாரிகளின் கலத்துரையாடல் கூட்டத்துக்கு தலைமை வகித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோகன் பேசியது: ஒட்டன்சத்திரம்- பழனி சாலையோரங்களில் ஏராளமான சிறு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனா். தற்போது பழனி தைப் பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தா்கள் பாதயாத்திரை வரத்தொடங்கி உள்ளனா். சாலையோர வியாபாரிகள் பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் கடைகளை நடத்தவேண்டும். விதியை மீறும் கடைக்காரா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கூட்டத்தில் ஒட்டன்சத்திரம் காவல் ஆய்வாளா் சீனிவாசன், சாா்பு- ஆய்வாளா்கள் நல்லசாமி, கணேசன், சூா்யகலா மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com