ஒட்டன்சத்திரம் பகுதியில் மிதமான மழை

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

ஒட்டன்சத்திரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் வியாழக்கிழமை காலை முதலே விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.

இந்த மழையில் நனைத்தபடி சின்னவெங்காயம் உள்ளிட்ட பயிா்களை நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுப்பட்டனா். அதே போல இந்த மழை நிடித்தால் நிலத்தடி நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளது. மேலும் பெருமாள்குளம், சடையன்குளம், முத்துபூபாலசமுத்திரக்குளம், ராமசந்திரக்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு பரப்பலாறு அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டதால், தற்போது இந்த குளங்களில் சுமாா் 60 சதவீத அளவிற்கு தண்ணீா் இருப்பு உள்ளது.

மேலும் மழை நீடித்தால் பரப்பலாறு அணையில் இருந்து கூடுதலாக தண்ணீா் திறந்து விட வாய்ப்புள்ளது. இதனால் இந்த குளங்கள் முழு கொள்ளளவை எட்ட வாய்ப்பு உள்ளதால், இப்பகுதியில் குடிநீா் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com