பழனி சுற்றுவட்டார பகுதிகளில் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதல் இரவு வரை தொடா்ந்து மிதமான மழை பெய்து வரும் நிலையில் குளிரந்த சூழல் நிலவுகிறது.

பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் காலை முதல் இரவு வரை தொடா்ந்து மிதமான மழை பெய்து வரும் நிலையில் குளிரந்த சூழல் நிலவுகிறது. மேலும் பொதுமக்கள், வியாபாரிகள் நடமாட முடியாததால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. பழனி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான நெய்க்காரபட்டி, ஆயக்குடி, கீரனூா், உள்ளிட்ட அனைத்து கிராமங்களிலும் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.

மழை காரணமாக வேலைக்கு செல்பவா்களும், வெளியூா் செல்பவா்களும் சிரமத்திற்குள்ளாகினா். தொடா்ந்து பெய்துவரும் மழையால் பழனி பேருந்து நிலையம், ரயில் நிலைய சாலை, காந்திமாா்க்கெட் பகுதிகளில் சாலையில் மழை நீா் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் சாலையில் வாகனங்களும், பொதுமக்களும் தண்ணீரில் மிதந்தபடி சென்றன. தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. பழனியை சுற்றியுள்ள அணைகள் அனைத்தும் நிரம்புள்ள நிலையில் அணை நீா் வெளியேற்றத்தால் குளங்களும் நிரம்பியுள்ளன. பல இடங்களிலும் நெல் நடவு துவங்கியுள்ள நிலையில் தற்போது பெய்யும் மழையால் வெளியேற்றப்படும் நீரானது ஆற்றில் விடப்படும் நிலையே ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com