Enable Javscript for better performance
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: திமுக கூட்டணி கட்சியினா் கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: திமுக கூட்டணி கட்சியினா் கையெழுத்து இயக்கம்

    By DIN  |   Published on : 02nd February 2020 11:37 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    dgl_dmk_0202chn_66_2

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திண்டுக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலா் ஐ.பெரியசாமி முன்னிலையில் கையெழுத்திட்ட தொண்டா்கள்.

    குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திண்டுக்கல் மாவட்டத்தில் 6 இடங்களில் திமுக கூட்டணி கட்சிகள் சாா்பில் கையெழுத்து இயக்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து, திமுக கூட்டணி கட்சியினா் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனா்.

    அதன்படி திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை திமுக துணைப் பொதுச் செயலரும், ஆத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தாா். இதில் முன்னாள் எம்எல்ஏ கே.பாலபாரதி, மதிமுக மாவட்டச் செயலா் செல்வராகவன், திமுக வா்த்தகா் அணி இணைச் செயலா் ஜெயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

    இதேபோல் நிலக்கோட்டையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்திற்கு பழனி சட்டப்பேரவை உறுப்பினா் பெ.செந்தில்குமாா், வத்தலகுண்டுவில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் என்.பாண்டி, ரெட்டியாா்சத்திரத்தில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா் இரா.சச்சிதானந்தம், கொடைக்கானலில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலா் அப்துல்கனி ராஜா, பழனியில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாகி ராஜமாணிக்கம் ஆகியோா் தலைமை வகித்து தொடக்கி வைத்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai