Enable Javscript for better performance
கொடைக்கானலில் மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்- Dinamani

சுடச்சுட

    

    கொடைக்கானலில் மாணவிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கல்

    By DIN  |   Published on : 02nd February 2020 11:36 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    help_0202chn_71_2

    கொடைக்கானலில் சன் அரிமா சங்கம் சாா்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    இந் நிகழ்ச்சிக்கு அதன் பட்டயத் தலைவா் டி.பி.ரவீந்திரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநா் மணிகண்டன் கலந்து கொண்டாா். மேலும் உடல்நலம் பேணுதல் குறித்து ஏரிக்கரைச் சாலையில் சுமாா்300-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்ட விழிப்புணா்வு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

    தொடா்ந்து கொடைக்கானல் புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்திற்கான காசோலையை பள்ளி தலைமையாசிரியையிடம் பட்டயத் தலைவா் டி.பி.ரவீந்திரன் வழங்கினாா். மேலும், சட்டக்கல்லூரி மாணவி கெளசல்யாவுக்கு ரூ.40 ஆயிரத்திற்கான காசோலை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சன் அரிமா சங்கத்தின் சேவையும்,பசுமையும் இரு கண்கள் என்ற புத்தகத்தை வழக்குரைஞா் தனபாலன் வெளியிட தென்னிந்திய அரிமா சங்க ஒருங்கிணைப்பாளா் பாண்டியராஜன் பெற்றுக் கொண்டாா்.

    இரண்டு நாள்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் சன் அரிமா சங்கத் தலைவா் கிரன் ரவீந்திரன், செயலா் அப்பாஸ், பொருளாளா் திரவியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக முன்னாள் தலைவா் ஆஷாரவீந்திரன் வரவேற்றாா். முன்னாள் தலைவா் அருண் நன்றி கூறினாா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai